உங்கள தற்குறின்னு ஊரே சொல்லுதுன்னா, சும்மா சொல்லலடா... கடுமையாக விமர்சித்த இடும்பாவனம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைக் கடத்தியாகச் சந்தேகப்பட்டு, குதிரைப்பேரம் நடந்திருக்கலாம் என யூகித்து, டிடிவி.தினகரன் ஆளுநரிடமே புகார் தெரிவித்திருக்கும் நிலையில், அந்த சட்டமன்ற உறுப்பினரே ஒரு வாகனத்தில் அமர்ந்து கையெழுத்து இடுவது போல 9 நொடிகள் கொண்ட ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது தவெக தரப்பு.

அதாவது, குதிரைப்பேரம் நடந்திருப்பதை உறுதி செய்வதாய் அமைந்திருக்கிறது அக்காணொளி. 

உங்கள தற்குறின்னு ஊரே சொல்லுதுன்னா, சும்மா சொல்லலடா!" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



பின்னணி:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் ஒரு த்ரில்லர் திரைப்படம்போல விறுவிறுப்பாக மாறியுள்ளன. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சிகளின் ஆதரவுடன் 117 இடங்களைப் பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு இன்னும் ஒரு இடம் மட்டுமே தேவைப்படும் நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தச் சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள ‘குதிரை பேர’ குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தங்களது கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவான காமராஜைக் காணவில்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நள்ளிரவில் அவர் ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தார். தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு தங்களது எம்எல்ஏவை இழுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

நள்ளிரவு 12 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்த எம்எல்ஏ காமராஜ், தான் புதுச்சேரியில் இருந்ததாகவும், ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்ததால் நேரில் வந்ததாகவும் விளக்கமளித்தார்.

குறிப்பாக, “தான் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்து வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பியதாகக் கூறப்படும் தகவல் தவறு; நான் பயன்படுத்துவதோ வாட்ஸ்அப் வசதியே இல்லாத சாதாரண மொபைல்” என்று அவர் கூறியது ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக அமைந்தது. பின்னர் அவர் தனது கைப்படக் கடிதம் எழுதி, தான் தவெக-விற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Idumbavanam karthi condemn to tvk vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->