திருப்பூரில் கொலை செய்யப்பட்ட வடமாநில பெண் - அதிரடி காட்டும் போலீசார்.!
north state woman murder in tirupur
திருப்பூரில் கொலை செய்யப்பட்ட வடமாநில பெண் - அதிரடி காட்டும் போலீசார்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் இன்று காலை இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதில், அந்த இளம்பெண் உடலில் மர்மநபர்களால் கழுத்தை நெரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்தது.
இதையடுத்து போலீஸார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீஸார், கொலைசெய்யப்பட்ட அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட பெண் வடமாநில பெண் போல் இருப்பதால், அவரை மர்மநபர்கள் கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
north state woman murder in tirupur