என்எல்சியில் காலியாகும் 4,036 பணி இடங்கள்! தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கிவரும் என்எல்சி நிறுவனத்தில் வரும் 4 ஆண்டுகளில்  4,036 நிரந்தர பாணியாளர்கள் ஓய்வு பெற உள்ளதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தற்போது 11,110 பேர் நிரந்தரமாக பணியாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கண்ணபிரான், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என்று க்ளெவி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், அடுத்த 4 ஆண்டுகளில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஆண்டுகளில் காலியாக உள்ள இந்த பணியிடங்கள் எப்போதும்போல வட மாநிலத்தவர்களுக்கு சென்று விடுமோ என்ற கேள்வி கடலூர் மாவட்ட மக்களுக்கு எழுந்துள்ளது. 

இந்த பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NLC job next 4 years


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->