நிவர், ஷவர், பவர், டவர், எவர்., வைரலாகும் கவிதை.!
nivar poet
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதி தீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது. இரவு 11.30 முதல் அதிகாலை 2.30 மணிவரை இந்த புயல் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த 5 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்துள்ளது. புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு கவிதை ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த கவிதை வருமாறு:-
“நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்.
எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர்.
நீ வருண பகவானால் வந்த ஷவர்.
உன்னுடைய வேகத்தால் வீழ்ந்துவிடும் பழைய சுவர்.
உன்னால் நனைந்தால் வந்துவிடும் பீவர்.
உன்னை பற்றிய நியூஸ் கேட்டால் வருகிறது பியர்.
உன்னால் எகிறுகிறது சுகர்.
உன்னால் சாலையிலேயே ஓடுகிறது ரிவர்.
உனக்கு இல்லை எவரும் நிகர்.
எங்களை காப்பது இனி எவர்?.
நீ வேகமாக இங்கிருந்து நகர்.
வராதே இங்கே நெவர்.”