நீலகிரி வருபவர்களில் யாருக்கு இ-பாஸ் கட்டாயம்?.. - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இங்கு கோடைகாலத்தில் மக்கள் அதிகளவு வருகை தருவது இயல்பான விஷயம். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் நீலகிரிக்கு மக்கள் வருவார்கள். 

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில், தளர்வுகளுக்கு பின்னர் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு நீலகிரிக்குள் வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. 

பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகளால் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டு மக்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் கேரளாவில் பரவ தொடங்கியதால் கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. 

இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இ-பாஸ் வாங்கி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Administration Announce Tourist Persons From Indian State E Pass Wanted


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->