மயிலாடுதுறையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்ட அதிசயம்!   - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரிக்கான போராட்டக்குழு அமைப்பு அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்திற்கு என்று மத்திய அரசு ஒதுக்கிய மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறை நீடூர் பகுதியில் ஜமாத்தினர் இலவசமாக வழங்குவதாக ஒப்புதல் அளித்த 22 ஏக்கரில் அமைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் கலந்துகொண்டு ஆலோசனை தெரிவித்தார். 

மத்திய அரசு மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரியை அமைக்க நாடுமுழுவதும் 75 மருத்துவக்கல்லூரிகளை துவக்க ரூ.325 கோடியில் மத்திய அரசு ரூ.195 கோடியும் மாநில அரசு ரூ.135 கோடியும் வழங்கும் திட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரியை ஒதுக்கியுள்ளது. அதை நாகப்பட்டினத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் அமைக்கவேண்டும் என்று மந்தைவெளி நிலம் 22 ஏக்கரை அதற்காக நாகை மாவட்ட ஆட்சியர் இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். 

25 கி.மீ தூரத்திற்குள் மற்றொரு மருத்துவக்கல்லூரி இருக்கக்கூடாது என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது என்றும் நாகப்பட்டினத்தின் இரண்டு பக்கங்களிலும் 20 கி.மீ தூரத்தில் திருவாரூர் மற்றும் காரைக்காலில் இரண்டு மருத்துவக்கல்லூரி ஏற்கனவே உள்ளது. ஆகவே மக்கள் தொகை அதிகம் கொண்டதும் மிகவும் பின்தங்கிய பகுதியுமான மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லுரியை திறக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இவ்வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது, மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே மத்திய மாநில அரசுகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அரசியல் சார்பற்ற இயக்கம் ஒன்றை தற்காலிகமாக ஏற்படுத்துவது என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பேட்டி: கல்யாணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New team form for need medical college to mayiladuthurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->