தமிழகத்தில் தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் புதிய திட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்ட பேரவையில் இன்று சட்ட மன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார். அதில் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் மிகவும் அவதி படுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் புதிய சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து தெரிவித்ததாவது,

"தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் தொடங்கப்பட இருக்கிறது. சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய சாத்தியக்கூறு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து அதற்க்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகத்தில் தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தபுதிய திட்டத்தின் மூலம் 389 வாகனங்களில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் பயணம் செய்வார்கள். அனைத்து ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும்  பயனுள்ள வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது". என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new scheme in tn april 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->