அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை.. மது அருந்திய பணியாளர்கள் பணிமனைக்குள் வரக்கூடாது.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாறு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

* பணிமனைக்குள் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணம் கொண்டும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட  தீய செயல்களை செய்தல் கூடாது. அவ்வாறு மீறுபவர்கள் மீது மேலதிகாரிகள் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

* இதையடுத்து, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் எந்த ஒரு பணியாளரும் பணிமனைக்குள் வரக்கூடாது. அவ்வாறு வருபவர்களை பாதுகாவலர்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது. அதை மீறி வருபவர்கள் மீது உடனடியாக தலைமையகத்தின் மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

* பணியாளர்களின் ஓய்வறைகளுக்கு மேல் தளங்களில் ஏதேனும் திறந்த நிலையில் அறைகள் அல்லது வெட்டவெளி தளங்கள் இருந்தால் அவற்றை பூட்டி வைக்க வேண்டும். பணியாளர்கள் பணியில் இருக்கும்போது கைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். 

* பணி நேரத்தில் பணியாளர்களை  பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான அனுமதி சீட்டில் உரிய மேற்பார்வையாளரின் அனுமதி பெற்று பாதுகாவலரிடம் தெரிவித்து பின்பு வெளியே செல்ல வேண்டும். அதேபோல், பகற்பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் அப்பேருந்தினை இயக்கக்கூடாது. 

* இதைத்தொடர்ந்து, மின் சாதனங்களை கையாளும் பணியாளர்கள் கண்டிப்பாக அதற்கான கையுறை மற்றும் உரிய காலணிகளுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் பணிகளை செய்திட வேண்டும். மின்சாரத்தால் இயக்கக் கூடிய இயந்திரங்களை தரைப் பகுதியில் கண்டிப்பாக ரப்பர் மேட்கள் போடப்பட வேண்டும். இயந்திரங்கள் இயக்கப்படாத போது உரிய மேல் உரைகள் கொண்டு மூடப்பட வேண்டும். 

* இயந்திரங்களில் பாதுகாப்பு உரைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில், பணிபுரியும் பணியாளர்களும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். பேருந்துகள் பணிமனையின் உள்ளே வரும் போது ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்டோர்கள் பேருந்தின் உள்ளே ஆய்வு செய்து, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களோ அல்லது வெடி பொருட்களோ இருப்பின் அவற்றை அகற்றிட வேண்டும். 

* மேலும், தேவை ஏற்படின் அருகில் உள்ள காவல்துறை அல்லது தீயணைப்பு துறையின் உதவியுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். பணிமனையில் மேலே குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியிலிருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதி செய்திட வேண்டும். என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new rules for govt driver conducter and workers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->