அதிமுக சார்பாக யாருக்கு அழைப்பு? ஓபிஎஸ் மகனுக்கா? யார் யார் கலந்து கொள்கிறார்கள்! முழு விவரம்!   - Seithipunal
Seithipunal


வருகின்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, இந்தியாவின் சுதந்திரத்தின் அடையாளமான, சோழ சாம்ராஜ்யத்தின் அதிகார பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள் டெல்லி சென்று உள்ளனர். திறப்பு விழா நிகழ்ச்சியின் போது அந்த செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி இடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர்.

இதற்கிடையே, குடியரசு தலைவருக்கு அழைப்பு இல்லை, அவர்தான் திறக்க வேண்டும் என்று, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக. காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

19 கட்சிகளின் இந்த முடிவு ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று பாஜக கூட்டணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், அதிமுக சிறப்பாக அதிமுக மாநிலங்களவை எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதேபோல், ஓபிஎஸ் தரப்பில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி மற்றும் ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை எம்பி ஆர்.தர்மர் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 New Parliament Building open ADMK side OPS Side


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->