புதிய அணை கட்டும் அறிவிப்பு வெளியானது - தமிழக அரசு அதிரடியாக பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ரூ.75.71 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப் பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 5 முக்கிய ஆறுகள் செல்கின்றபோதும் கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையும், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையும் ஏற்படுகிறது.

எனவே, ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டுமென விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து தடுப்பணைகள் கட்ட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்திட தமிழக அரசு பொதுப் பணித்துறைக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி மாவட்டத்தில் முதற்கட்டமாக 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திட்டக்குடி வட்டம் கீழச்செருவாய் கிராமத்தில் வெள்ளாற்றில் ரூ.21.59 கோடியில் தடுப்பணை கட்டப்படுகிறது.

இதேப்போன்று, சிறீமுஷ்ணம் வட்டம் கள்ளிப்பாடி கிராமத்தில் வெள்ளாற்றில் ரூ.16.31 கோடியிலும், அதே வெள்ளாற்றில் பவழங்குடி-புதூர் இடையே ரூ.16.27 கோடியிலும் கட்டப்படுகிறது.

கெடிலம் ஆற்றின் குறுக்கே கடலூர் வட்டம் விலங்கல் பட்டில் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகளுடன் கூடிய தடுப்பணை ரூ.10.68 கோடியிலும், அதே கெடிலம் ஆற்றில் பண்ருட்டி வட்டம் நரிமேட்டில் சன்னியாசிப்பேட்டை-பாலப் பட்டு இடையே ரூ.10.34 கோடியில் தடுப்பணை அமைக்கப் படுகிறது.

மேலும், வெள்ளாற்றில் சிதம்பரம் வட்டம் கிள்ளையில் தற்காலிக தடுப்பாக ரூ.52.14 லட்சத்தில் தடுப்பு அமைக்கப்படுகிறது.

இவ்வாறு மொத்தம் 6 பணிகளுக்கு ரூ. 75.71 கோடியில் பணிகள் நடத்தப்படுவதற்காக தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை (பொதுப் பணித்துறை) மூலமாக ஒப்புந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new dam construction tender invited


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->