மோசமாக திட்டியபடி, முடியை இழுத்து போட்டு அடித்துக் கொண்ட மாணவிகள்.! பேருந்து நிலையத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாநகரில் பாளை பஸ் நிலையம் மிக முக்கிய பேருந்து நிறுத்தமாக செயல்பட்டு வருகிறது. அன்றாடம் இங்கே ஏராளமான பேருந்துகள் வந்து செல்கிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இதே பேருந்து நிலையத்தில் தான் பள்ளிக்கும், வீட்டிற்கும் செல்வார்கள். 

இதன் காரணமாக இந்த பேருந்து நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக கூட்டம் காணப்படும். இத்தகைய நிலையில், அரசு உதவி நிதி பெறுகின்ற பள்ளி சாரா டக்கர் பள்ளியை சேர்ந்த சில மாணவிகளுக்கு பேருந்து நிலையத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அது முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, பள்ளி ஆசிரியை அவர்களை தடுக்க முயற்சித்த போது எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து கொண்டு சண்டையிட்டனர். இதனால், அங்கே மிகுந்த கலவரம் ஏற்பட்டது. 

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தனர். பேருந்தில் இடம் பிடிக்க ஏறியபோது அவர்களுக்குள் இந்த தகராறு ஏற்பட்டதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதுபோல பல சம்பவங்கள் பேருந்து நிலையத்தில் நடந்து வருகிறது. எனவே, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வரும் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு அங்கே வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai students attack in bus stand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->