திருவள்ளூர் : திருடிய வீட்டுக்காரரிடமே லிப்ட் கேட்ட திருடன் - என்ன ஒரு புத்திசாலி தனம்.! - Seithipunal
Seithipunal


 மாவட்டம் அவடியை அடுத்த வீராபுரம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெனின் ராஜதாஸ். இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று காலை இவர், தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நான்கு பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை மர்மநபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக ஜெனின் ராஜதாஸ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஜெனின் ராஜதாசிடம் 'லிப்ட்' கேட்டார். 

அவர் மீது ஜெனினுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர் மர்மநபரை பிடிக்க முயன்றார். ஆனால், தப்பி ஓடிய மர்மநபரை அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து சோதனை செய்த போது தனது வீட்டில் திருடிய நகை மற்றும் வெள்ளி கொலுசுடன், 100-க்கும் மேற்பட்ட திருட்டு சாவிகள் இருப்பது தெரியவந்தது. 

இதனால், கோபமடைந்த பொதுமக்கள் அவரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அறிந்த போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். 

அந்த விசாரணையில் அவர், பெரிய காஞ்சீபுரம் பெருமாள் நாயக்கன் தெருவை சேர்ந்த உமர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உமரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thiruvallur young man ask lift in house owner after steal in house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->