திண்டிவனம் : ஒரே நாளில் 4 வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு விவசாயி. இவர் நேற்று காலை குடியிருக்கும் வீட்டை பூட்டி விட்டு தனது பூர்வீக ஊருக்கு சென்றார். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த பணம்- நகையை கொள்ளையடித்து சென்றனர். 

அன்று மாலை வீடு திரும்பிய செல்வம், வீட்டுக்கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் பதறி அடித்து உளீ சென்ற பார்த்த பொது, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் திருடு போய் இருந்தது. 

இதுகுறித்து செல்வம் போலீசுக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் துணை தலைமை காவலர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்த்ஜிற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதேபோன்று, பாதிரி கிராமத்தை சேர்ந்த காளி, ஆறுமுகம், நீலகண்டன் என்பவர்களின் வீட்டிலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

மேலும் பாங்களத்தூர் பாதிரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பூட்டை உடைப்பதற்கு கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர்.அங்கு எந்த பொருளும் இல்லாததால் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். 

ஒரே நாளில் நான்கு வீடுகளில் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thindivanam Mysterious people robbery in four house at same day


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->