கர்நாடகா || பெண்குழந்தையால் தந்தை எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் உள்ள சீனிவாசப்பூர் அருகே ஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் லோகேஷ். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மஞ்சம்மா மீண்டும் கர்ப்பமானார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மஞ்சம்மாவுக்கு சீனிவாசப்பூர் அரசு மருத்துவமனையில், பெண்குழந்தை குழந்தை பிறந்தது. இப்போதும் பெண் குழந்தை பிறந்ததால் மஞ்சம்மாவும், லோகேசும் மனம் உடைந்து இருந்தனர். பின்னர், மஞ்சம்மா மட்டும் மருத்துவமனையில் இருந்த நிலையில், லோகேஷ் வீட்டுக்கு புறப்பட்டு வந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்த அவரது மூன்று மகள்களும் அலறி அடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடினர். இதனால் பதற்றம் அடைந்த அக்கம்பக்கத்தினர், சீனிவாசப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர், போலீசார் லோகேஷ் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு மேசையில், லோகேஷ் கைப்பட எழுதி இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது,

'எங்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களை பார்த்துக்கொள்வதே எங்களுக்கு பெரிய விஷயமாக உள்ள நிலையில், நான்காவதாக ஆண் பிள்ளை பிறக்கும் என்று நினைத்தேன். ஆனால் எங்கள் விதையை என்று தெரியவில்லை. நான்கவதும் பெண் குழந்தையாக உள்ளது.

இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதால், நான் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த தற்கொலைக்கு நானே முழு பொறுப்பு. வேறு யாரும் இதற்கு காரணம் இல்லை' என்று எழுதியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka father sucide for girl baby


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->