இரயிலில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் மரணம்.. நாமக்கல் அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


தூக்க கலக்கத்தில் இரயிலில் பயணம் செய்த அரசு ஊழியர், இரயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியாகினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகேயிருக்கும் அத்தனூர் இரயில்வே மேம்பாலத்தில், கரூர் - சேலம் இரயில்வே பாதையில் ஓடும் இரயிலில் இருந்து வாலிபர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சேலம் இரயில்வே காவல் துறையினர் மற்றும் வெண்ணாத்தூர் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இரயிலில் இருந்து தவறி விழுந்தவர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி மேற்கு தெருவை சார்ந்த காந்தி தேவர் என்பவரது மகன் சக்திவேல் (வயது 35) என்பது தெரியவந்தது. 

சக்திவேல் கமுதி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் நிலையில், இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னைக்கு சென்ற இரயிலில் பயணம் செய்ததும், தூக்க கலக்கத்தில் படியில் நின்று பயணம் செய்கையில் தவறி விழுந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை பி.ஆர்.ஓ அலுவலகத்தில் மனுகொடுக்க சென்ற சக்திவேல், இரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகி இருக்கிறார். இவருக்கு தீபிகா என்ற 23 வயது மனைவியும், அபர்ணா காந்தி என்ற 3 வயது மகளும், விகாஷினி என்ற 1 வயது மகளும் என 2 மகள்கள் உள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Rasipuram Train Travel Govt Employee Died Slipped on Running Train


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->