நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மத்திய சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவு?
Namakkal kidney sale case Directive for investigation by the central health department?
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் விரைவில் நாமக்கலுக்கு வந்து நேரடி விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக (கிட்னி) விற்பனை தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கிட்னியை ரூ.6 லட்சத்திற்கு விற்றதாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வீடியோவைத் தொடர்ந்து கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிபாளையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிட்னி விற்பனைக்கு இடைத்தரகராக அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த ஆனந்தன் செயல்பட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது ஆனந்தன் தலைமறைவாக உள்ளார்.

இந்தநிலையில் சந்தேகப்படும் ஈரோடு மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைத்தரகர்கள் எங்கு செயல்படுகிறார்கள், எந்த மருத்துவமனைகள் சட்டவிரோதமாக கிட்னி வாங்குகின்றன என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் விரைவில் நாமக்கலுக்கு வந்து நேரடி விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Namakkal kidney sale case Directive for investigation by the central health department?