துரோகி என்ற மனைவியால் மரணித்த முன்னாள் இராணுவ வீரர்.. மனிதத்தை பேணி செயல்பட்டவர் துள்ளத்துடிக்க கொலை.! - Seithipunal
Seithipunal


முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் பெரும் அதிர்ச்சி திருப்பமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் இராசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த ஐந்தாம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிவகுமாரின் மனைவி பார்கவி கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியதை உறுதி செய்தனர். 

பார்கவியின் தாயாரும், பார்கவியின் நண்பருமான செல்வராஜ் ஆகியோர் இணைந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியது. இராணுவத்தில் பணியாற்றி வந்த சிவகுமார் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக பணி ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பிய நிலையில், தனது சொந்த உழைப்பில் வீடு, விவசாய நிலம் என வாங்கி வாழ்ந்து வந்துள்ளார். 

நேர்மையான அதிகாரியாக அவர் வாழ்ந்து வந்த நிலையில், சிவகுமார் இராணுவத்தில் பணியாற்றிய சமயத்தில் ஊரில் இருக்கும் அவரது வீட்டில் செல்வராஜ் என்பவர் தனது மனைவியுடன் குடியிருக்க வாடகைக்கு வந்துள்ளான். வீட்டில் பார்கவி தனியாக இருந்த நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்ட செல்வராஜ் அவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறான். 

இருவரும் தனிமையில் பலமுறை வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்த நிலையில், செல்வராஜுக்கு லாரி வாங்க பார்கவியிடம் பணம் கேட்டுள்ளான். அவரும் தனது கணவரிடம் பேசி கடனாக பணம் வழங்கலாம் என்று கூறி ரூ.4 இலட்சத்தை பெற்று கொடுத்துள்ளார். 

தற்போது சிவகுமார் ஊருக்கு வந்த நிலையில், இவர்கள் இருவரையும் இடையேயான உறவு சிறிதுகாலம் தாமதமாக தெரியவந்துள்ளது. இருவரையும் தனித்தனியாக அழைத்து சிவகுமார் கண்டித்த நிலையில், செல்வராஜன் மனைவி தற்போது கர்ப்பமாக இருந்ததால், அவருக்காக பரிதாபப்பட்டு வீட்டை காலி செய்ய வற்புறுத்தாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில், இதனை சாதகமாக்கிக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி மீண்டும் தங்களது தவறான உறவை தொடர்ந்தனர். இதனால் சிவகுமாருக்கும் - பார்கவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கணவனை கொலை செய்ய திட்டமிட்ட பார்கவி, செல்வராஜிடமும், தனது தாய் அம்சவள்ளியிடமும் கூறி இருக்கிறார். 

அம்சவள்ளியோ மருமகனின் சொத்துக்களும், மகளின் சந்தோஷமும் போதும் என்று நினைத்து சிவகுமாரின் கொலை திட்டத்திற்கு ஒத்துழைத்துள்ளார். லாரி வாங்குவதற்காக சிவகுமாரிடம் இருந்து கடனாக பெற்ற ரூ.4 இலட்சத்தில் ரூ.1 இலட்சத்தை கூலிப்படைக்கு கொடுத்த செல்வராஜ் மற்றும் பார்கவி இந்த கொலையை அரங்கேற்றி உள்ளது. 

கடந்த மாதத்திலேயே சிவகுமார் தனியாக சென்ற போது லாரி விபத்து மூலமாக கொலை செய்ய முயற்சித்த நிலையில், அவர் அதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி தனது தங்கை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற சிவக்குமாரை இடைமறித்த கும்பல், இந்த கொலையை அரங்கேற்றி உள்ளது. இதனையடுத்து, விசாரணைக்குப் பின்னர் பார்கவி, செல்வராஜ், அம்சவள்ளி மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர் 5 பேர் என 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Ex Army Officer Sivakumar Murder by Wife Parkavi with Her Affair Man Selvaraj


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->