காசி விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை வளையத்தில் காவல்துறை?..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் பகுதியை சார்ந்த சுஜி என்ற காமுக காசி (வயது 26), பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட பல பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காமுகனை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும், காசிக்கு உடந்தையாக இருந்த இன்னொரு காமுகன் டிசைன் ஜீனோ (வயது 19) என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும், இவர்கள் இருவரை தவிர்த்து கணேசபுரம் பகுதியை சார்ந்த தினேஷ் என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். கணேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காசி பெண்களை மிரட்ட தினேஷை பயன்படுத்தி வந்ததும், காசியின் தொடர்பை துண்டித்த பெண்களின் அலைபேசி எண்களை முதலில் தினேஷிற்கு பகிர்வதும் தெரியவந்தது. மேலும், தினேஷ் குறித்த பெண்களுக்கு தொடர்பு கொண்டு, அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி வந்துள்ளான். இதில் தினேஷ் கோயம்புத்தூரில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சட்டப்படிப்பு பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

காமுக கும்பல்கள் தங்களை வசதியான குடும்ப இளைஞருடன் தொடர்பை அறிமுகம் செய்து, விலையுயர்ந்த கார்களில் வளம் வந்ததும், இதே காரிலேயே இவர்களிடம் சிக்கும் பெண்களை வைத்து பல ஊர் ஊராக சுற்றி, பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வந்ததும், பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பணம் பறிப்பு மற்றும் ஆணைக்கு இணங்க வைப்பது போன்ற நடவடிக்கையும் அரங்கேறியுள்ளது. தங்களின் ஆசைக்கு இணங்காத பெண்களை பல வகைகளில் காமுகன்கள் மிரட்டி வந்த நிலையில், தினேஷின் கூட்டாளி குறித்த விபரமும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் காவல் துறையினருக்கு சம்மன் வழங்கியுள்ளனர். மேலும், காசி வைத்திருந்த பல வாகனமும் முறைகேடாக அவனது பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்த நிலையில், தனியார் வங்கி அதிகாரிகள், வட்ட போக்குவரத்து அதிகாரிகள் போன்றோரை விசாரிக்க முன்னதாகவே சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல் அதிகாரிகளுக்கும் சம்மன் வழங்கப்பட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னதாகவே காவல் நிலையத்தில் காசி தொடர்பான புகார் வந்த நிலையில், அது கிடப்பில் போடப்பட்டதால் இவ்விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagarcoil Kasi case investigation CBCID wish to Investigation police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->