அடக்கடவுளே! விபத்துப் பெயரில் கொலை...! திருப்பூரை அதிரவைத்த பேரூராட்சி தலைவர் செயல்! நடந்தது என்ன?
Murder name accident action town council chairman that shook Tiruppur What happened
திருப்பூர் அருகே கருகம்பாளையத்தைச் சேர்ந்த 60 வயதான பழனிச்சாமி, நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது தி.மு.க.வை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி ஓட்டிய கார் பயங்கரமாக மோதி பழனிச்சாமி உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் விபத்து என கருதப்பட்ட இச்சம்பவம், பின்னர் பரபரப்பான திருப்பத்தை எடுத்தது.இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பம், “தார்சாலை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முன்விரோதம் ஏற்பட்டது.
அதற்காகவே திட்டமிட்டு கார் ஏற்றி கொன்றார்” என்று காவலில் புகார் அளித்தனர்.மேலும் இந்த விசாரணையில், உண்மையில் விபத்து அல்ல, முன்விரோதம் காரணமாக திட்டமிட்ட கொலையென வெளிச்சத்துக்கு வந்தது .
இதையடுத்து காவலர்கள் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை கைது செய்து, கொலை வழக்கில் சிறைபடுத்தினர்.
English Summary
Murder name accident action town council chairman that shook Tiruppur What happened