2 ஆண்டுகளில் "1.5 லட்சம் இலவச மின் இணைப்பு".!! சட்டபேரவையில் எம்.ஆர்.கே பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் வேளாண்மை சட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நல பாதுகாப்புத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜட்டை தாக்கல் செய்து உரையாற்றிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக முழுவதும் உள்ள 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நிலம் தமிழகத்தின் தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாகவும், பேரிடர் மற்றும் பருவம் தவறிய மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதில் 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1,564 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், 4,773 ஏரி, குளம் தூர்வாரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 260 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும், 2022-2023 மற்றும் 2023-2024ம் நிதி ஆண்டுகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த ஆண்டு முடிவிலேயே அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்=கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mrk paneer Selvam submit agri budget


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->