ஒத்த எம்.பி சீட் : வரிந்துகட்டி நிற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. 

இதில், திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், கே ஆர் ராஜேஷ் குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. 

இதில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் தேர்தல் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே, மூன்றில் ஒரு எம்பி சீட் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியினர், அதை யாருக்கு கொடுப்பது என்று, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசுவநாதன், பிரவீண் சக்கரவர்த்தி ஆகிய 6 பேர் இடையே போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp seat one trn congress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->