மகன் இறந்த துக்கத்தில் தாய் எடுத்த விபரீதம் முடிவு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி அமுதா (50). இவர்களது மகன் டிரைவர் பால்ராஜ் (36). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட பால்ராஜ், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மகன் இறந்த துக்கத்தில் தாய் அமுதா, அன்று மாலையே அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother commits suicide in Trichy


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->