மதுரை அருகே மதுபானக் கடையில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் விற்பனை முடிவடைந்தால் விற்பனையாளர் கணேஷ்குமார் கடியை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட தயாரானார்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கணேஷ்குமாரை மிரட்டியது. அதற்கு கணேஷ்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தங்கள் வைத்திருந்த கத்தியால் கணேஷ்குமாரைத் தாக்கி கடையைத் திறக்கும் படி கூறியுள்ளனர். 

இதையடுத்து கணேஷ்குமார் கதவைத் திறந்தவுடன் நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளேச் சென்று அங்கிருந்த மதுபாட்டில் பெட்டிகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டும், கல்லா பெட்டியில் இருந்த ஒரு லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விற்பனையாளர் கணேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money and liquar bottles robbery in madurai tasmac


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->