தமிழகத்தின் பெருமையை தூக்கி பிடித்த மோடி.! வெளியிட்ட ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி முறைசாரா சந்திப்பு நாளையும், இன்றும் மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த சந்திப்பிற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் சீன அதிபருடன் சந்திப்பு மற்றும் தமிழகத்திற்கு வந்தது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டியுள்ளார். 

அதில், "சென்னை வந்து இறங்கினேன். கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. 

இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு, இந்த முறை சாரா உச்சி மாநாட்டின் மூலமாக மேலும் மேலும் வலுப்பெற வேண்டும்." என அதில் தமிழர்களின் பெருமையை குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi twit about tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->