மைக் கிடைத்த உற்சாகத்தில் பரபரப்பு பேட்டி.. பாய்ந்த வழக்கு... அதிர்ந்துபோன திமுக வட்டாரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் இதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இந்த நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுக செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கரூர் மாவட்ட ஆட்சியரை கடுமையாக வரம்பை மீறி விமர்சனம் செய்தார். 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், கரூர் மாவட்ட ஆட்சியருக்கு யோசனை செய்யும் திறன் இல்லை என்றும், அவர் மாவட்ட ஆட்சியர் பதவியில் இருக்க திறன் இல்லாதவர் என்றும், இன்றுவரை கரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைக்கு நான் உட்பட திமுகவை சார்ந்த நபர்களை அவர் அழைத்து பேசவில்லை. பிற பகுதிகளுக்கு அவர் சென்று வந்தாலும் எங்களை அழைக்கவில்லை என்றும், திமுகவில் இந்த தொகுதியில் உள்ள எம்.பி மற்றும் சுற்றுவட்டார தொகுதி எம்.எல்.ஏக்களை அவர் அழைக்கவில்லை என்றும், இனி இதுபோன்று அவர் செய்தால் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல இயலாது. 

எனது பின்னணியில் பெரும் கூட்டமே இருக்கிறது, மாவட்ட ஆட்சியருக்கு அறிவு இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது குறித்த விடீயோக்கள் மட்டும் வெளியான நிலையில், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் மீது தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகார் அளித்திருந்தார். 

மேலும், கொலை மிரட்டல் மற்றும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தையால் பேசுதல் தொடர்பான புகாரின் அடிப்படையில், சுமார் 25 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திமுக எம்.எல்.ஏ மீதான புகார் திமுக வட்டாரத்திடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA Senthil balaji complaint registered by Karur district collector


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->