படுத்து உருண்ட வேட்பாளர்.. 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோய் விடுமே..? அரவக்குறிச்சியில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்த லில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதிப் வேட்பாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரமேஷுக்கு இடம் ஒதுக்கி ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தற்போது வாக்குப் பதிவு நாள் நெருங்கி வரும் சமயத்தில் அந்தப் வேட்பாளர்கள் பட்டியலை மாற்றி வடிவமைத்துள்ளனர்.

இதில் ஒன்பதாவது இடத்தில் அவருக்கு இடம் ஒதுக்கி பட்டியல் தயார் செய்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.நான்காவது இடத்தில் இருந்த தனது வேட்பாளர் வரிசை எண்ணை 9-வது இடத்துக்கு மாற்றியதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் எனவும், தான் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிற அந்த வாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அவர் முறையிட்டார்.

ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தேர்தல் அலுவலகமான அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla candidate protest karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->