ஸ்விகி, சோமோட்டோ ஊழியர்களுக்கு நலவாரியம் -  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஸ்விகி, சோமோட்டோ ஊழியர்களுக்கு நலவாரியம் -  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.!

ஓலா, ஊபர், ஸ்விகி, சோமோட்டோ போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் 76வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது, "சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும், ஓலா, ஊபர், ஸ்விகி,சோமோட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதை இன்று நாம் காணலாம்.

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இந்த பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென்று தனியே நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதை இன்று அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin announce welfare board of swiggy zomato employees


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->