ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து, மு.க அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி. இவர் கடந்த 2013 ஆம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் மு.க அழகிரி உறுதியாக இருந்து மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 

இந்நிலையில், தற்போது நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றியடைந்த நிலையில், மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றார். கடந்த 10 வருடத்திற்கு பின்னர் திமுக ஆட்சியை அமைத்துள்ளது.

எலியும் - பூனையுமாக இருந்து வந்த மு.க அழகிரி, எனது தம்பி முதல்வராக பொறுப்பேற்றது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மு.க ஸ்டாலின் நல்லாட்சியை வழங்குவார் என்று பாராட்டு தெரிவித்தார். 

இதனையடுத்து, மு.க அழகிரி ஆதரவாளர்களும் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் “இணைந்த இதயங்களே”, “தம்பி வா தலைமை ஏற்க வா”, “தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்”  என்று சுவரொட்டி தயார் செய்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், உள்ளாட்சி தேர்தலில் மு.க அழகிரி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Alagiri Supporters Poster to MK Stalin TN CM 8 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->