பெண் கற்பழிப்பு புகாரில் சிக்கிய திமுக புள்ளி.. அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திருச்செங்கோட்டை சார்ந்த திமுக இளைஞரணி செயலாளர் சதீஷ் கற்பழிப்பு புகாரில் கைதாகி சிறையில் இருக்கிறார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அதிமுகவிற்கு மக்கள் ஆதரவு சிறந்த முறையில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதை போல, அவரின் மறைவுக்கு பின்னரும் 100 வருடம் அதிமுக மகத்தான ஆட்சி அமையும். 

மின்நிலையங்களில் தயார் செய்யப்படும் மின்சாரம், மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்தது போக வெளிமாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரம் தேவைக்கேற்ப வாங்கப்படுகிறது. எந்த மாநிலமும் தனது மாநில தேவைகளுக்கு மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவு மின்சாரம் தயார் செய்வதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியான வன்முறைகள், அராஜகம் நடக்கும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். திமுக பிரமுகர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வேலைக்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் திருச்செங்கோட்டை சார்ந்த திமுக இளைஞரணி செயலாளர் சதீஷ் ஆவார். 

தற்போது அவர் கற்பழிப்பு புகாரில் கைதாகி சிறையில் இருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே இப்படியொரு அராஜகம் நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

நகராட்சி பகுதிகளில் புதைவடை மின்கம்பிகள் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மணல் அள்ளுவதை அதிகாரிகள் தடுத்தால், எனக்கு போன் போடுங்கள், அதிகாரி அடுத்தகணம் அங்கு இருக்கமாட்டார்கள் என்று செந்தில் பாலாஜி மிரட்டுகிறார். மக்கள் அதிமுகவிற்கு அமோக ஆதரவளித்து வெற்றிபெற வைப்பார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thangamani Talks about DMK Supporter Arrest Sexual Abuse Case two Days Before 18 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->