பாஜக தலைவரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மன்னிப்புக் கேட்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி தலைவர் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். அதன்பின்னர் அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அங்குள்ள பக்தர்களுடன் சேர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினார். 

இதுகுறித்து, அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடும் பா.ஜ.க. மாநில தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று விமர்சனம் செய்தார். 

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளதாவது, "கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போல. இந்த ஈஸ்வரன் கோவிலில் மூலவர் சங்கமேஸ்வரர் மற்றும் அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. 

இதனை சோமாஸ்கந்தர் வடிவம் என்று அழைப்பர். இங்குள்ள கருவறையில் சுப்ரமணிய சுவாமி 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் அமர்ந்து சூரனை வதம் செய்யும் கோலத்தில் முருகன் காட்சி அளிக்கிறார். இந்தத் தோற்றத்தில் முருகனை நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. 

இந்த ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, ஆண்டுதோறும் முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் நடத்தப்படுகிறது. இது கூட தெரியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியுள்ளார். 

இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்" என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sendhil balaji sory to bjp leader annamalai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->