தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பேருந்து கட்டணம் தற்போது உயர் வாய்ப்பில்லை என்று, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இதுகுறித்து தெரிவிக்கையில்,

"அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகான வரும் சட்டமன்ற கூட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போதைக்கு தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த எந்த வாய்ப்பும் இல்லை.

சென்னையில் இரண்டாயிரம் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். 

குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் இந்த புதிய செயல்திட்டம் வரவுள்ளது" என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister say about tn bus ticket rate hike issue april 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->