#Breaking: புள்ளிவிபரத்துடன் திமுகவை பங்கம் செய்த அமைச்சர்.. " மக்களுக்கு உண்மை தெரியணும் " என கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அரசு பள்ளியில் பயின்று வரும் மற்றும் கிராமப்புற மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளியில் பயின்றவர் என்ற அடிப்படையில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டு இன்று சட்டமாக அமலாகியுள்ளது. 

இது குறித்து எதிர்க்கட்சிகள் எந்த கோரிக்கையும் வைக்காமல், முதல்வரின் மனதில் உருவாகிய எண்ணத்தை சட்டமாக நிறைவேற்றியுள்ளார். மாநில அரசுகளை பொறுத்த வரையில் இந்திய அரசியலைப்பு சட்டத்தின் கீழ் நேற்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. மக்களுக்கு அதிமுக ஆட்சியின் உண்மை கட்டாயம் தெரியவேண்டும். 

இதன்பின்னர் ஆளுநரும் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். முதல்வர் நேரில் ஆளுநரை சந்தித்து நன்றியை தெரிவித்துக்கொண்டார். பொதுவாக மருத்துவ கல்லூரிகளை பொறுத்த வரையில், எந்த ஒரு ஆட்சிக்காலத்தில் இல்லாத அளவிற்கு தமிழகம் முழுவதும் 11 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. 

கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3050 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் முயற்சியால் 1050 இடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவின் கடந்த ஆட்சிக்காலத்தில் 300 மருத்துவ இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்த அதிமுக அரசின் ஆட்சியில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள், 5 சட்டக்கல்லூரிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்கும். இந்த வருடமே 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இந்த வருட கவுன்சிலிங் மூலமாக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக மாறும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jayakumar Pressmeet 30 October 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->