அனைவரும் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி!  - Seithipunal
Seithipunal


கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள நீர் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் அங்கு இருந்து 3  லட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீரானது தமிழகத்திற்கு காவேரியின் வழியாக வெளியேற்றபடுகின்றது. 

தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்  அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எஞ்சிய உபரிநீர் அனைத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வந்து கொண்டிருக்கும் நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தாலே, மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் பத்தடி நிரம்பிய மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று ஒரு நாளில் 15  அடி நிரம்பி இதுவரை 85 அடியாக உள்ளது. இன்று ஒரு நாளில் அல்லது நாளை காலைக்குள் 100 அடியை எட்டும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக ஒரே நேரத்தில் திறக்கும் போது அவை நேரடியாக வீணாகும் என்பதால், முன்கூட்டியே அணையை திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. 

இந்த முடிவு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் கடந்த வருடம் அதிகபடியான மழைநீர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டதால, மொத்தமாக கடலுக்கு சென்றது. இந்த வருடம் நிச்சயமாக பயன்படும் வகையில் முன்கூட்டியே பாசனத்துக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். 

தற்போது மேட்டூர் அணைக்கு 2.10  லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் முடிவு காவிரி டெல்டா மக்கள் எதிர்பார்த்த முடிவாகும். இதன் மூலம் வெள்ளத்தை தடுக்க முடியும் சீராக நீரையும் வெளியேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam tomorrow open for agriculture purpose


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->