சென்னை பச்சை வழித்தடத்தில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெய்துவரும் தொடர் கன மழையால் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டு ரெயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிகமான காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சரிசெய்து, தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train service again start in green railway track


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->