இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை., போலிசிடம் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் இளம்பெண்ணின் ஆபாசமான புகைப்படத்தை அவருடைய கணவருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்த நபர் தற்போது போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்ற 40 வயது நபர் அதே பகுதியை சேர்ந்த 32 வயது பெண்பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்பகுதி மக்கள் இதுகுறித்து சந்திரனை கண்டித்து விரட்டி அடித்தனர். 

ஆனாலும், அவர் மீண்டும் அந்தப் பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பெண்ணின் கணவருக்கு அனுப்பி இருக்கின்றார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த பெண் உறவில் இருந்து விலக நினைத்தபோது விடாமல் சந்திரன் தொல்லை செய்து வந்துள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men arrested who make pressure to women


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal