மாண்டஸ் புயல் | ஆதார், குடும்ப அட்டை, கல்வி சான்றிதழ், ஸ்விட்ச் ஆஃப் - பொதுமக்கள் இதையெல்லாம் மறக்காமல் செய்து விடுங்கள்! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயலின் போது பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில், 

* ஆதார் அட்டை. குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட

* முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

* நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்.

* இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டுவிட்டர்). TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை வதந்திகளை நம்பக்கூடாது. மட்டுமே பின்பற்றுவதோடு, அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

* கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அணைத்து வைக்கவேண்டும்.

* வீட்டை விட்டு வெளியேறும் போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இருக முடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வீட்டின் மின் இணைப்பு மற்றும் சுவிட்சுகளை அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முதியோர். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்.

மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries). மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர். மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். 

பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandous cyclone alert people awareness


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->