சொத்து பிரச்சனையால் அண்ணனை கொலை செய்த தம்பி.. மதுரை அருகே நிகழ்ந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


சொத்து பிரச்சனையால் அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், கீழவளவை பகுதியை சேர்நதவர் ராஜீவ்காந்தி.  இவர் அந்த பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்ரி வந்தார். இவருக்கும் இவரது தம்பி கார்த்திக்கும் இடையில் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

சம்பவதன்று, இருவருக்கும் இடையில் சொத்து பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி  வீட்டில் இருந்த அரிவாளால் ராஜீவ்காந்தியை சரமாரியாக  வெட்டியுள்ளார்.  இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு விசாரணை செய்து காவல்துறையினர் கார்ததிக்கை கைது செய்தனர். இந்த சம்பவம்ம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Killed his own brother near Madurai


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal