அரியலூரில் பயங்கரம் : திருமண ஆசை காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.! போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் பயங்கரம் : திருமண ஆசை காட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.! போலீசார் அதிரடி.!

அரியலுார் மாவட்டத்தில் உள்ள கூவத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவர், அதேபகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். 

இதனை நம்பிய அந்த சிறுமி வாலிபரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நேரத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஜான், சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இதற்கிடையே மகளைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஜான் பிரிட்டோவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அரியலுார் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார். அதன் படி மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி சுவர்ணா ஜான் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

அதன் பின்னர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்த ஜான் பிரிட்டோ, நேற்று, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested kuntas for harassment in ariyalur


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->