பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது.!! வெளியான திடுக்கிடும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி தனது பேரனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பெருங்களத்தூரில் துணி, பழங்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

அங்கு கூட்டமாக இருந்ததால் நேற்றிரவு 11 மணியளவில் பெருங்களத்தூர் ரயில் நிலையம் வந்த தமிழ்செல்வி 1வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் தமிழ்செல்வி வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வியை அங்கிருந்த பயணிகள் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தமிழ்செல்வியை கத்தியால் குத்தியது யார்? என போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரயில் நிலைய அருகே உள்ள வீடுகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் நபரை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.வி நகரைச் சேர்ந்த 56 வயதாகும் சுப்பிரமணியன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த தமிழ்செல்வியிடம் தவறாக நடக்க முயன்றதை அடுத்து அவர் சுப்பிரமணியனை தட்டி விட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பியது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man arrested for stabbing woman at Perungalathur railway station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->