சட்டபேரவை நேரலையில் ஒளிபரப்பியதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டபேரவை கூட்டதொடரை நேரலையில் ஓளிபரப்பு செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டசபை நேரடிஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை கவர்னர் நியமிப்பதற்குப் பதிலாக மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டுமென்று வலியுறுத்தி 30/12/2021 அன்று மக்கள் நீதி மய்யம் சட்டவிளக்கங்களோடு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த இருப்பதை வரவேற்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

makkal needhi maiam has welcomed the live broadcast of the assembly


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->