பழநியில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி போகர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பழனியில் போகர் ஜீவசமாதி இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில் விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஆசிரமத்தை நிர்வாகித்து வரும் ஸ்ரீமத் போகர் ஆதீனம் பாத்திரசாமி முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் அதற்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் புலிப்பாணி பாத்திரசாமி மடம் சார்பில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் பழனியில் வரும் 18ஆம் தேதி போக ஜெயந்தி விழா நடத்தவும், மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு வழக்கம்போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார். இதனால் இந்த வருடமும் வழக்கம் போல் போகர் ஜெயந்தி விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC Permission to hold Bogar Jayanti festival in Palani


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->