சக பெண்களை ஆபாசமாக படமெடுத்து.. பின், மாணவி செய்த செயல்.. நேரில் கண்ட பெண்ணுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் இருக்கும் ஹாஸ்டல் ஒன்றில் சக பெண்கள் உடை மாற்றும் வீடியோவை மருத்துவருக்கு எடுத்து அனுப்பிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியில் ஆஷிக் என்ற ஒரு மருத்துவர் கிளினிக் நடத்தி வந்துள்ளார். மதுரை அண்ணா நகரில் உள்ள விடுதி ஒன்றில் கமுதியை சேர்ந்த காளீஸ்வரி என்ற கல்லூரி மாணவி தங்கி படித்து வந்துள்ளார். 

காளீஸ்வரி தனது விடுதியில் தங்கி படிக்கும் சக பெண்கள் உடை மாற்றுவது, அவர்கள் தூங்கும் காட்சிகள் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து மருத்துவர் ஆஷிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். காளீஸ்வரியின் இந்த செயலை சக மாணவி ஒருவர் பார்த்துவிட்டு விடுதி காப்பாளர் ஜனனிடம் புகார் கொடுத்துள்ளார்.

அவர் போலிசில் புகாரளிக்க, இந்த புகாரின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட காளீஸ்வரி என்ற பெண்ணின் மொபைல் ஃபோனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில், தன்னுடன் தங்கி இருக்கும் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து, அனுப்பிவிட்டு வீடியோக்களை அழித்து இருப்பது கண்டறியப்பட்டது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காளீஸ்வரி மற்றும் ஆஷிக் இருவரையும் கைது செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Women kaleeswari sharing abusive video to Doctor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->