தினமும் ஒரு திருக்குறள்.! வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதியான ஜி.ஆர்.சுவாமிநாதன் சார்பாக., வழக்கறிஞர்களுக்கு அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவுரையில் தெரிவித்திருப்பதாவது., 

தமிழ் மீது தீராத காதல் கொண்ட தமிழ் இலக்கிய ஆர்வலர் பழமலை என்பவரின் மகனும்., செசன்சு நீதிபதி செம்மல் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக "திருக்குறள் முனுசாமி" என்ற புத்தகத்தை எனக்கு வழங்கினார். 

இந்த புத்தகத்தை படித்த சமயத்தில்., திருக்குறள் குறித்து ஓய்வு பெட்ரா நீதிபதியான அரிபரந்தமன் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் கூறியது எனக்கு நினைவில் வந்தது. 

thiruvalluvar, திருவள்ளூர்,

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட நாம்., தமிழர்கள் என்று கூறிக்கொண்டு மட்டும் இல்லாமல்., குறைந்தது சுமார் 51 திருக்குறள்களை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இதன் முதற்கட்டமாக., 

"சொல்லுவது சொல்லை பிரிதோற்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
- என்ற குறளை புரிந்துகொண்டு மனதில் பதியவைத்துள்ளேன். 

இதனைப்போன்றே வழக்கறிஞர்களும் தினமும் நீதிமன்றத்தில் ஒரு திருக்குறளை அர்த்தத்துடன் புரிந்து கொண்டு கூற வேண்டும். இந்த குறளுக்கான பொருளை பிறரும் தெரிந்து கொள்ளும் வகையில்., பகல் 1.30 மணிக்கு அல்லது மாலை 4.45 மணிக்கு கூற வேண்டும் என்று தனது அறிவிப்பில் கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai judge court order to tell thirukural in court campus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->