மதுரை சித்திரைத் திருவிழா - மதுபானக் கடைகள் இயங்குமா?  - Seithipunal
Seithipunal


மதுரை சித்திரைத் திருவிழா - மதுபானக் கடைகள் இயங்குமா? 

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுபானக் கடைகளை ஆறு நாட்கள் மூடக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில், "மதுரை சித்திரை திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்டவை நடைபெறும். 

இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு முன்பு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. அதனை தடுக்கும் விதமாக மதுரையில் ஆறு நாட்கள் மதுபானக் கடைகளை மூடினால் குற்றச்சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது. 

ஆகவே மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள மதுபானக் கடைகளை ஏப்ரல் முப்பதாம் தேதியிலிருந்து மே மாதம் ஐந்தாம் ஆம் தேதி வரை ஆறு நாட்கள் மூட உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, "மதுரை மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து, தேவை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai high court order tasmac close for madurai chithirai festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->