விநாயகர் சதுர்த்தி தடை விவகாரம்.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சிறிய கோவில்கள் திறக்கவும், மக்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தில் விநாயகர் சிலையை மக்கள் வழிபட்டு, கரைப்பது வழக்கமான ஒன்று. 

இதனால் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்றும், கொரோனா பரவலுக்கு இது வித்திடும் வகையில் இருப்பதால், விநாயகர் சதுர்த்தி தினத்தில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் வீட்டிற்குள்ளேயே இருந்து கடவுளை வணங்கி வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அரசின் எச்சரிக்கையை மீறி கூட்டம் நடத்தி, அவ்விழாவின் மூலமாக கொரோனா பரவினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். 

பல சமூக, சமய, மத பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாட காத்திருந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. மாறாக அலட்சியத்துடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு, வெள்ளம் வந்த பின்னர் அணையை கட்டியிருக்கலாமே என்று யோசனை செய்ய கூடாது. 

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தடைக்கு எதிராக முறையீடு செய்து மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த தடைக்கு எதிராக வழக்கு தொடுத்தால் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai court want Petition about Vinayagar Chathurthi Case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->