ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான வழக்கு... மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் அனுமதி செய்யப்பட்டது தொடர்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வழங்கி அடாவடி வசூல் செய்யும் நிறுவனங்களை கூகுள் செயலில் இருந்து நீக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த மனுவில், கூகுள் நிறுவனம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எப்படி அனுமதி அளிக்கிறது என்பது தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இது தொடர்பான மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ஆன்லைன் செயலி மூலமாக கடன் வழங்கும் நபர்கள் விதிமுறைகளை உருவாக்கி கடன்களை வசூல் செய்வதில், அங்கீகரிக்க முடியாத முறைகளை பின்பற்றி வருகின்றனர். 

இது போல கடன் வழங்குவோர் மூலமாக சட்டவிரோத கூறுகள் நாட்டிற்குள் உட்புகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய நிதித்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Order to RBI Google and Finance Ministry Secretary to Ans about Online Loan Apps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->