பிரசவத்திற்கு சென்றது குற்றமா?.. குமுறிய ஆட்டோ ஓட்டுநர்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராமகிருஷ்ணன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அங்குள்ள மதுரை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதி செய்துள்ளார். 

இதன் பின்னர் இவர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், ராமகிருஷ்ணனை இடைமறித்த போக்குவரத்து காவல்துறையினர், விதியை மீறி வாகனத்தை இயக்கியதாக கூறி ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். மேலும், ஏற்கனவே செலுத்த வேண்டிய அபராத தொகை ரூ.500-யை செலுத்த கூறியும் எச்சரித்துள்ளனர். 

நான் பிரசவத்திற்கு, அவசரத்திற்காக தான் சென்று வருகிறேன் என்பதை கூறியும், இதனை காதில் ஏற்றாத காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ராமகிருஷ்ணன் வீடியோ பதிவு செய்து தனது வருத்தத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். 

இது குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இதனைக்கண்ட மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த், ஆட்டோ ஓட்டுனர்  ராமகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து, அவரது அபராதத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Auto driver feeling sad Police commissioner speak


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal