ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் உறுதி... அதிர்ச்சியில் ஜல்லிக்கட்டு ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சில வெளிநாட்டு கைக்கூலிகளால் தடை செய்யப்பட்டது. பின்னர், தமிழக மக்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு, பல்வேறு தடைகளை தாண்டி தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில், கண்ணன் முதல் பரிசை தட்டிச்சென்றார். இவரின் மீது இரண்டாவதாக வெற்றிபெற்றவர் ஆள் மாறாட்டம் செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தட்டிச்சென்ற கண்ணன் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில், இரண்டாவதாக பரிசை பெற்றவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.

மேலும், முதல் பரிசை தட்டிச்சென்ற கண்ணன் என்பவரின் 33 ஆவது ஆடையை, ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு மாற்றி வழங்கி ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளது. மேலும், முன்பதிவே செய்யாமல் ஜல்லிக்கட்டில் கண்ணனின் ஆடையை அணிந்து விளையாடியது உறுதியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Alanganallur Jallikattu Fraud Confirm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->