லூப் சாலை விவகாரத்தை அரசியலாக்க கூடாது.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் மீன் கடை அமைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதோடு அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறதா என அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள் 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் போக்குவரத்தை முறைப்படுத்துவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வின் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிக மீன் கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்படும் எனவும், கலங்கரை விளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கு குறித்த கருத்து தெரிவித்த நீதிபதிகள் லூப் சாலை விவகாரத்தில் யாருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை. பொதுசாலை மாநகராட்சிக்கு சொந்தமானது அல்ல அது பொதுமக்கள் சொத்து. சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை அரசியலாக்கவும் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High Court new order on loop road issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->