மது குடிக்க பணம் தராததால் மாமியாருடன் சண்டை! வாலிபரை கைது செய்த காவல்துறையினர்.! - Seithipunal
Seithipunal


சிகரெட்டால் மாமியாருக்கு சூடு வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தேவி தம்பதியரின் மகள் பவதாரணி. கார்த்திக் என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வய்தில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கார்த்திக் தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த கார்த்திக் மாமியாருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் கர்த்திக் மது குடிக்க தனது மாமியாரிடம் பணம் கேட்க, தேவி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கார்த்திக், தேவியை அடித்ததுடன் சிகரெட்டால் சூடும் வைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தேவி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Liquor addict problem in family police arrest


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->